நாகை-காங்கேசன் துறை இடையே கப்பல் போக்குவரத்து வரும் 10ம் தேதி தொடக்கம்..!!

நாகை: நாகையிலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு விடப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. நகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு வருகின்ற 10ம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.

இதற்காக நாகை துறைமுகத்தில் குடிவரவு துறை,சுங்கம் பயணிகள் சோதனை மையம், மருத்துவ பரிசோதனை, உடைமைகள் பாதுகாப்பு என அனைத்துக்கும் தனித்தனியே அறைகள் கட்டப்பட்டுள்ளன. நாகை துறைமுகத்தில் காலை 7.30 மணிக்கு புறப்படும் கப்பல் 3 மணி நேரத்தில் காங்கேசன் துறையை அடையும் இதற்காக 18% ஜிஎஸ்டி வரியுடன் ரூ.6500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் 50 கிலோ வரை பொருட்களை இலவசமாக எடுத்துச்செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை காங்கேசன் துறை இடையிலான போக்குவரத்துக்கு கொச்சியில் வடிவமைக்கப்பட்ட சேரியபாணி என்ற கப்பல் இன்று மாலை நாகை வரவுள்ளது.

இதனிடையே கப்பல் போக்குவரத்துக்கான முன்னேற்பாடுகளை நாகை சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இலங்கை செல்ல விசா மற்றும் பாஸ்போர்ட் கட்டாயம் விமான நிலையங்களில் பின்பற்றப்படும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் கப்பல் பயணத்திற்கு கடைபிடிக்கப்படும் என்று இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

The post நாகை-காங்கேசன் துறை இடையே கப்பல் போக்குவரத்து வரும் 10ம் தேதி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: