சென்னை தேனாம்பேட்டையில் மருந்துக் கடை ஊழியர் வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் ஆனதால் அதிர்ச்சி: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் மருந்துக் கடை ஊழியர் வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் ஆனதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் மருந்து கடையில் பணியாற்றும் முகமது இத்ரிஸ் என்ற இளைஞரின் தனியார் வங்கிக்கணக்கில் ரூ.753 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. சில நிமிடங்களிலேயே அவரின் வங்கி கணக்கை வங்கி நிர்வாகம் முடக்கியுள்ளது.

ஏற்கனவே சென்னை கோடம்பாக்கத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த கார் ஓட்டுநர் திண்டுக்கல் ராஜ்குமார் என்பவரின் வங்கி கணக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.9 ஆயிரம் கோடி ரூபாய் பிரபல தனியார் வங்கி கார் ஓட்டுநர் ராஜ்குமார் வங்கி கணக்கில் டெபாசிட் செய்திருந்தது. இது தொடர்பாக சிறிது நேரத்திலே அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

மேலும் இரண்டாவது முறையாக சென்னையில் இதேபோல ரூ.753 கோடி இளைஞரின் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்டிருப்பது வங்கி நிர்வாகத்தின் சேவையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தனியார் வங்கி தனது வங்கி கணக்கு முடக்கியுள்ளதாக இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சென்னை தேனாம்பேட்டையில் மருந்துக் கடை ஊழியர் வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் ஆனதால் அதிர்ச்சி: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: