கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வள்ளியூர்: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின்திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இந்த இரண்டு அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் அங்கு 3, 4வது அணு உலைகள் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 5 மற்றும் 6வது அணுமின் உலைகளுக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதலாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த சூழலில் கடந்த மாதம் 6ம் தேதி முதல் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் முதல் உலையில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1000 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் இந்திய – ரஷ்ய அணு விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் 2வது அணுமின் நிலையத்தில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

The post கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: