ஹீரோ ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் மகளிர் கால்பந்து அணிக்கு ரூ.22 லட்சம்: அமைச்சர் உதயநிதி வழங்கினார்

சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசாவில் நடந்த ஹீரோ ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் மகளிர் பிரிவு கால்பந்து போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாடு அணிக்கு ரூ.22 லட்சம் உயரிய ஊக்கத்தொகையை நேற்று வழங்கினார். மேலும், கத்தார் நாட்டில் டிசம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 12ம் தேதி வரை நடைபெற உள்ள டி-20 காது கேளாதவர்களுக்கான உலகக் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ளும் 2 வீரர்களுக்கு தலா ரூ.75,000க்கான காசோலைகள் மற்றும் கோயம்புத்தூரில் 20.10.2023 முதல் 22.10.2023 வரை நடைபெறவுள்ள தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டிக்காக ரூ.5 லட்சத்திற்கான காசோலை ஆகியவற்றை “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை” சார்பில் வழங்கினார். நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

The post ஹீரோ ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் மகளிர் கால்பந்து அணிக்கு ரூ.22 லட்சம்: அமைச்சர் உதயநிதி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: