மேலும், சிலிண்டர் டெலிவரி செய்ய வந்த கேஸ் ஏஜென்சி ஊழியர் அருண்குமார் என்பவருக்கு தீயில் சிக்கி காயம் ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அங்கிருந்த 3 பேரையும் மீட்டனர். பின்னர் பார்த்தசாரதி மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரையும் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பார்த்தசாரதி, தனலட்சுமி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கேஸ் ஏஜென்சி ஊழியர் அருண்குமார் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
The post நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் வீட்டில் கேஸ் சிலிண்டர் மாற்றும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
