ராஜாஸ் பல் மருத்துவ கல்லூரி ஆண்டு விழா

நாகர்கோவில்,அக்.5: காவல்கிணறு ஜங்சனில் உள்ள ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரியின் 32வது ஆண்டு விழா நடைபெற்றது.இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கல்லூரியின் சிறப்புக்களை பற்றி பேசினார். விழாவில்  சித்ரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் விஞ்ஞானி டாக்டர் எஸ்.மஞ்சு கலந்து கொண்டு மாணவ, மாணவியர்கள் ஆராய்ச்சித் துறையில் மேற்படிப்பினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். விழாவில் ராஜாஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஜேக்கப் ராஜா தலைமை உரையாற்றினார். நிர்வாக இயக்குநர் சபீனா ஜேக்கப் சிறப்புரையாற்றினார். கல்லூரி இயக்குநர் டாக்டர் பாக்யராஜ், கல்லூரி முதல்வர் டாக்டர் அலெக்ஸ் மேத்யூ முருப்பல் மற்றும் துணை மற்றும் உதவி முதல்வர்கள்,பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாட்டை கல்லூரி நிர்வாகம் செய்து இருந்தது.

The post ராஜாஸ் பல் மருத்துவ கல்லூரி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: