சர்வதேச தரத்தில் தயாராகும் சென்னை சேப்பாக்கம் மைதானம்: சுவர்களில் வண்ணம் தீட்டும் பணி தீவிரம்

சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த இந்திய அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. வருகின்ற 8ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் பங்கெடுப்பதற்காக சென்னை வந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கும் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையில் 4 போட்டிகள் நடைபெற இருப்பதால் சர்வதேச தரத்திற்கும் சேப்பாக்க மைதானம் தயாராகி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக மைதானத்திற்கு வெளியே உள்ள சுவர்களில் கண்கவர் ஓவியங்களை தீட்டும் பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் களமிறங்கியுள்ளனர். சென்னை அரசு கவின் கலை கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது கைவண்ணத்தில் வண்ணத்து பூச்சி, பறவைகள், இயற்கை சார்ந்த காட்சிகள் சுவர்களை அழகாக்கி வருகின்றன.

The post சர்வதேச தரத்தில் தயாராகும் சென்னை சேப்பாக்கம் மைதானம்: சுவர்களில் வண்ணம் தீட்டும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: