2023 வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவித்தது தேர்வுக்குழு


வாஷிங்டன்: 2023ம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேதியியலுக்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவ் ஆகிய விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக 3பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும், அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசை நார்வே வழங்குகிறது. பிற பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது. ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன.

அதன்படி, 2023-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. வேதியியல் விஞ்ஞானிகள் மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக 3 வேதியியல் விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

The post 2023 வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவித்தது தேர்வுக்குழு appeared first on Dinakaran.

Related Stories: