ஒருமாத கிரிக்கெட் திருவிழாவில் ரசிகர்கள் உற்சாகம்: அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் சிறப்பு ஏற்பாடு

அகமதாபாத்: உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்கவிருக்கும் நிலையில் தொடக்கவிழா இன்று அகமதாபாத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. 13வது ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை முதல் நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதும் இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெரும் நாளை அகமதாபாத்திலுள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூஸிலாந்து அணியிடம் களம்காண்கிறது. இந்நிலையில் இன்று அகமதாபாத்தில் தொடக்கவிழா வண்ணமயமாக நடைபெறவுள்ளது.

மாலை 7 மணிக்கு தொடங்கும் விழாவில் இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் லேசர் காட்சிகளும் வானவேடிக்கைகளும் நடைபெறும் பாலிவுட் நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும் உலகக்கோப்பைக்காக மோதும் 10 அணிகளின் கேப்டன்கள் அறிமுக நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளைய போட்டிக்கு டிக்கெட் எடுத்துள்ள ரசிகர்கள் இன்றைய தொடக்க விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

The post ஒருமாத கிரிக்கெட் திருவிழாவில் ரசிகர்கள் உற்சாகம்: அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் சிறப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: