டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய போட்டிகளில் தமிழ்நாடு தேசிய மாணவர்படை மாணவர்களின் காலாட்படை பிரிவினர் வெற்றி

தமிழ்நாடு தேசிய மாணவர்படை மாணவர்களின் காலாட்படை பிரிவினர் புதுதில்லியில் 19 செப்டம்பர் முதல் 30 செப்டம்பர் 23 வரை நடைபெற்ற அகில இந்திய போட்டிகளில் பெற்ற வெற்றி
1. தேசிய மாணவர்படை இயக்குநரகத்தின் (தமிழ்நாடு புதுச்சேரி (ம) அந்தமான் நிகோபார்) காலாட்படை பிரிவின் 91 மாணவர்கள் அகில இந்திய காலாட்படை அணிகளின் போட்டிகள் புதுதில்லியில் 19 செப் முதல் 30 செப் 23 வரை நடைபெற்றது. தமிழ்நாடு தேசிய மாணவர் படையின் துணிவு, ஆர்வம் மற்றும் வைராக்கியத்துடன் கலந்துக் கொண்டு அனைத்துப் போட்டிகளிலும் 39 பதக்கங்கள் (துப்பாக்கி சுடுதல் (ம) தடை தாண்டுதல் தனியருக்கான 4 பதக்கங்கள் உட்பட) வென்று வெற்றி வாகை சூடியுள்ளனர்.

2. இந்த போட்டிகளானது துப்பாக்கி சுடுதல், துப்பாக்கி ஏந்தி தடைதாண்டுதல், வரைபடம் படித்தல், கூடாரம் அமைத்தல், களம் அமைத்தல், போர்க்களம் அமைத்தல் போன்ற போட்டிகள் ஆண்,பெண் என இரு பிரிவினருக்கும் தனித்தனியே நடத்தப்பட்டன. பெண்கள் பிரிவினர் சுகாதாரம் (ம) ஆரோக்கியப் போட்டியில் தங்கம், கூடாரம் அமைத்தலில் வெள்ளி பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர். ஆண்கள் பிரிவினர் துப்பாக்கி சுடுதல் மற்றும் தடைதாண்டுதலில் வெள்ளி பதக்கங்களை வென்று (2 தங்கம் 1 வெள்ளி 1 வெண்கல பதக்கங்களை பெற்று) இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர். தேசிய மாணவர் படை அணியினர் மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சென்னை (ம) மதுரையில் நடைபெற்ற பல்வேறு முகாம்களில் பங்கெடுத்து மிகக் கடுமையான போட்டி பயிற்சிகளைக் கடந்து தேர்ந்தெடுக்கப் பெற்ற வெற்றியாகும்.

இவர்களுக்கான பாராட்டு விழா சென்னையிலுள்ள தேசிய மாணவர்படை தலைமையகத்தில் மாணவர்படை 02.10.2023 அன்று தேசிய துணை தலைமை தளபதி கமோடர் அதுல் குமார் ரஸ்தோகி அவர்கள் வெற்றி பெற்ற அனைத்து தேசிய மாணவர் படை மாணவர்கள் அணியை பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

The post டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய போட்டிகளில் தமிழ்நாடு தேசிய மாணவர்படை மாணவர்களின் காலாட்படை பிரிவினர் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: