இவர்களுடன் அடைக்கலத்தின் தந்தை சுப்பிரமணி(70)யும் வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் ஹர்ஷினி நீண்ட நேரம் தூங்கியதை அண்ணன் ராஜசேகர் கண்டித்தார். பின்னர் ராஜசேகர் தாயுடன் வெளியில் சென்றுவிட்டார். அண்ணன் திட்டியதால் மனம் உடைந்த ஹர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் இறுதி சடங்கு நடத்தி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த தாத்தா சுப்பிரமணி, பேத்தியின் உடலை பார்த்து காலை முதல் அழுதபடி இருந்தார். மயானத்தில் ஹர்ஷினி உடலை அடக்கம் செய்து விட்டு வந்ததும் துக்கம் தாங்க முடியாமல் மயங்கியவர் மாலை 6 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நேற்று இறுதி சடங்குகள் முடிந்து பேத்தியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே அவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது. பேத்தி இறந்த துக்கத்தில் தாத்தாவும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
The post நீண்ட நேரம் தூங்கியதை கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு appeared first on Dinakaran.
