திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இம்மாத இறுதியில் வருகை தருகிறார். அதை ஒட்டி விழா நடைபெற உள்ள இடத்தை அமைச்சர் எ.வ. வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், இம்மாத இறுதி வாரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். விழா நடைபெறும் அதிகாரப்பூர்வமான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மாநில அளவிலான 3நாட்கள் நடைபெறும் வேளாண் கண்காட்சி திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை முதல்வர் திறந்து வைத்து பார்வையிட உள்ளார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும், திருவண்ணாமலையில் மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் 15க்கும் மேற்பட்ட மாவட்டத்தை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான ஆயத்த பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுஆலோசனைகள் வழங்கி பேசுகிறார்.
The post முதல்வர் வருகையொட்டி விழா முன்னேற்பாடுகளை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.