கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பயிலரங்கம்

குமாரபாளையம்: குமாரபாளையம் அன்பு கலை அறிவியல் கல்லூரியில், தமிழ் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி என்ற தலைப்பில், பன்னாட்டு பயிலரங்கம் நடந்தது. தமிழ்துறை தலைவர் முனைவர் கருப்புசாமி வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் பயிலரங்கை துவக்கி வைத்து பேசினார். அன்பு கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்து பேசினார். செவிலியர் கல்லூரி முதல்வர் ஹேமலதா வாழ்த்துரையாற்றினார். பயிலரங்கின் நோக்கம் குறித்து துணை முதல்வர் மஞ்சுளா விளக்கி பேசினார். திருவாரூர் மத்திய பல்கலை கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ரவி பங்கேற்று, கல்வெட்டில் காணப்படும் தமிழ் எழுத்துக்களை படிக்க பயிற்சியளித்தார். பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், முனைவர்கள் இளங்கலை மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்துறை உதவி பேராசிரியர் கூறினார்.

The post கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பயிலரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: