பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பக்கமுள்ள எலந்தகுட்டையை சேர்ந்த லாரி டிரைவர் ராமசாமி. ஒரே ஊரில் அருகருகே கணவனும், மனைவியும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கனிஷ்கர்(16) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் தாய் தந்தை வீட்டில் வசித்து வருகின்றனர். பெற்றோர் பிரிந்து வாழ்வது குழந்தைகள் இருவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்து வரும் கனிஷ்கர், தனது பெற்றோர்களை சேர்ந்து வாழும்படி வலியுறுத்தி வந்துள்ளான். ஆனால் பெற்றோர் அதை ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த கனிஷ்கர் நேற்று முன்தினம் தாய் தந்தை இருவருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினான். மாலையில் மகனை காணாத பெற்றோர், மகன் எழுதி வைத்த கடிதத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், வெப்படை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மாணவன் கனிஷ்கர், பழனிமலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பழனிக்கு சென்று மாணவனை போலீசார் மீட்டனர்.
The post கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான பள்ளி மாணவன் பழனியில் மீட்பு appeared first on Dinakaran.