திருப்பதியில் தரிசனத்துக்கு 2 நாள் காத்திருக்கும் பக்தர்கள்

திருமலை: புரட்டாசி மாதம் 2ம் சனிக்கிழமை என்பதாலும் இன்று ஞாயிறு, நாளை காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை நாட்கள் வருவதாலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் 3 முதல் 4 நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். எவ்வித டிக்கெட்டுகளும் இல்லாமல் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு வைகுண்டம் காத்திருப்பு அறையில் அமர வைத்து பின்னர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு வரக்கூடிய பக்தர்களின் கூட்டம் நேற்று மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து பாபவிநாசம் சாலை வரை நந்தகம் ஓய்வறை அருகே சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்திருக்கின்றனர். பக்தர்கள் நேற்றைய நிலவரப்படி சுமார் 48 மணிநேரம் அதாவது 2 நாட்கள் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்க வேண்டிய நிலை உள்ளது.

The post திருப்பதியில் தரிசனத்துக்கு 2 நாள் காத்திருக்கும் பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: