ராஜஸ்தானில் கெலாட் அரசுக்கு சிக்கல் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி: கருத்துக்கணிப்பில் தகவல்

புதுடெல்லி: மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். ராஜஸ்தான் கெலாட் அரசு தோல்வி அடையும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசம், மிசோரம், தெலங்கானா மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் குறித்து இடிஜி என்ற அமைப்பு கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது. இதில் 230 தொகுதிகள் கொண்ட மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 118 முதல் 128 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப்பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பா.ஜவுக்கு 102 முதல் 110 இடங்கள் கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மகாகவுசல் பகுதியில் உள்ள 38 இடங்களில் காங்கிரசுக்கு 16 முதல் 20 இடங்களும், பா.ஜவுக்கு 18 முதல் 22 இடங்களும் கிடைக்கும். ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு செல்வாக்கு மிக்க குவாலியர்-சாம்பல் மண்டலத்தில் உள்ள 38 இடங்களில் பா.ஜவுக்கு 4 முதல் 8 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

காங்கிரசுக்கு 26 முதல் 30 இடங்கள் கிடைக்கும். மத்திய மபியில் உள்ள 36 தொகுதிகளில் பா.ஜ 22 முதல் 24 தொகுதிகளையும், காங்கிரஸ் 12 முதல் 14 தொகுதிகளையும், பந்தல்கண்ட் பகுதியில் உள்ள 26 தொகுதியில் காங்கிரஸ் 11 முதல் 13 தொகுதிகளையும், பாஜ 13 முதல் 15 தொகுதிகளையும், விந்தியா பகுதியில் உள்ள 30 தொகுதியில் பா.ஜ 19 முதல் 21 தொகுதிகளையும், காங்கிரஸ் 8 முதல் 10 தொகுதிகளையும், 66 தொகுதிகள் உள்ள மால்வா பகுதியில் காங்கிரஸ் 41 முதல் 45 தொகுதிகளையும், பா.ஜ 20 முதல் 24 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் 200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் இழுபறி நிலை ஏற்படலாம். அல்லது காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் வாய்ப்பு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ அங்கு 95 முதல் 105 தொகுதிகளையும், காங்கிரஸ் 91 முதல் 101 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ராஜஸ்தானில் கெலாட் அரசுக்கு சிக்கல் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி: கருத்துக்கணிப்பில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: