இதே போல்கடந்த 2006-2011ம் ஆண்டு தமிழக அமைச்சர்களாக இருந்தபோது தங்கம் தென்னரசுவும், பிற்படுத்தப்பட்டோர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த ஸ்ரீவில்லிப்புதூர் நீதிமன்றம் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை விடுவித்தது.
இந்த உத்தரவுகளை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்து இருந்தார். மேலும் இந்த வழக்குகளை தானே விசாரிக்கப்போவதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
The post தாமாக முன்வந்து விசாரணை 3 தமிழக அமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு appeared first on Dinakaran.