பின்னர் அவர்களின் உடல் செயல்பாடு மைக்ரோ பேட்டர்களை பங்கேற்பாளர்களின் சுகாதார பதிவுகளுடன் ஒப்பிட்டுள்ளனர். சிறிய செயல்பாடுகளினால் அவர்களுடைய உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்தனர். அதில் மிதமான மற்றும் தீவிரமான செயல்பாடுகளை மேற்கொண்டவர்களுக்கு மாரடைப்பு,பக்கவாதம் அல்லது அகால மரணம் ஏற்படுவதற்கான அபாயங்கள் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சிட்னி பல்கலைகழக பேராசிரியர் இம்மானுவேல் ஸ்டாமட்டாகிஸ் கூறுகையில், ‘‘மாடி படியில் ஏறுவது, தரையை சுத்தம் செய்வது போன்ற அன்றாடம் செய்யும் சிறிய வீட்டு வேலைகள் பெரிய உடற்பயிற்சி இல்லை என்றாலும் கூட இது மருத்துவரீதியாக பலன்களை கொடுக்கின்றன’’ என்றார்.
The post மாடி படி ஏறுங்க… தரையை சுத்தம் செய்யுங்க… மாரடைப்பு, பக்கவாதம் வருவதை வீட்டு வேலை செய்து தடுக்கலாம்: ஆராய்ச்சியில் அடடே தகவல் appeared first on Dinakaran.