ஜம்முவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியை கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இரு தீவிரவாதிகள் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் எல்லையை கடந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக குப்வாரா மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து குப்வாரா மாவட்டம், மச்சல் செக்டார் கும்காடி ஏரியாவில் ராணுவம், போலீஸ் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது எல்லையை கடக்க முயன்ற இருவரை அவர்கள் சுட்டுக் கொன்றனர். அவர்களிடமிருந்து, 2 ஏ.கே ரக துப்பாக்கி, தோட்டா நிரப்பும் உறை, 90 ரவுண்டு சுடும் குண்டுகள், பாகிஸ்தானிய கைத்துப்பாக்கி, ஒரு பை, பாகிஸ்தான் பணம் ரூ.2,100 ஆகியவை கைப்பற்றப்பட்டன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடப்பதாக ராணுவ, போலீஸ் கூட்டுப்படை தெரிவித்துள்ளது.

The post ஜம்முவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: