சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை ஏற்றது தமிழ்நாடு அரசு..!!

சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்றது. மின் கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் தொழில்கள் நிரந்தரமாக முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைக் கட்டணம், பீக் அவர் கட்டணம் ரத்து செய்தல் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை ஏற்று அதனை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் மின் இணைப்பு 3B-ல் இருந்து 3A1 TARIFF-க்கு மாற்ற 12KW கீழுள்ள அனைத்து நிறுவனமும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. குடிசை மற்றும் மின் நுகர்வோர்க்கு மின் இணைப்பு 12KW TARIFF 3A(1) அளிக்கப்பட வேண்டும். மேலும், தாழ்வழுத்த நிலை கட்டணத்தை பழைய கட்டண முறையிலேயே அமல்படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை ஏற்றது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.

Related Stories: