ராஜ்கோட்: தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட அசோக் குமார் மதுரெலா (37) மற்றும் அவரது சகோதரர் ஆனந்த்(35). பொறியியல் பட்டதாரிகளான இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஒரு நிறுவனத்தில் பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர். அங்கு எகிப்து நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை அசோக் குமார் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் எகிப்து பெண் அசோக் குமாரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனிடையே, அசோக் குமாருக்கு ஆதரவு அளித்து வந்த நிறுவனத்துக்கு அவர் பணம் பாக்கி வைத்திருந்ததால், அவரின் பாஸ்போர்ட்டை அந்த நிறுவனம் பறித்து கொண்டது. இதனால் இந்தியா வர முடியாமல் தவித்த அசோக் குமார் ஈரானில் இருந்து கள்ள படகு மூலம் குஜராத் வந்தார். அங்கு அசோக் குமார், ஈரானிய மீனவர்கள் முஸ்தபா பலுச்சி(38), ஜஷேம் பலுச்சி(25), அமீர் ஹுசைன் பலுச்சி(19) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
The post பாஸ்போர்ட் இல்லாததால் கள்ளத்தனமாக ஈரானில் இருந்து தப்பி வந்த தமிழக பொறியாளர் கைது: 3 ஈரானிய மீனவர்களும் கைது appeared first on Dinakaran.