புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள ஆப்கன் தூதரகம் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக கிடைத்த செய்தியின் உண்மை பற்றி வெளியுறவுத்துறை விசாரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் முந்தைய அஷ்ரப் கனி அரசால் இந்திய தூதராக நியமிக்கப்பட்டவர் பரித் மாமுன்ட்சே. கடந்த 2021 ஆகஸ்டில் ஆப்கன் தலிபான்களின் பிடிக்கு வந்த பின்னரும் இந்தியாவுக்கான ஆப்கன் தூதராக அவர் இருந்தார். இந்த நிலையில் பரித் மாமுன்ட்சே கடந்த பல மாதங்களாக லண்டனில் இருக்கிறார். அதனால் கடந்த 2020 முதல் தூதரக வர்த்தக கவுன்சிலராக இருந்த காதிர் ஷா என்பவர் தலிபான்கள் தன்னை தூதரக பொறுப்பாளராக நியமித்ததாக வெளியுறவுத்துறைக்கு கடந்த ஏப்ரலில் கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் தனது இந்தியாவுக்கான தூதரக செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக ஆப்கன் தூதரக அதிகாரிகள் வெளியுறவுத்துறைக்கு செய்தி அனுப்பியுள்ளனர். இதுபற்றி வெளியுறவுத்துறை விசாரணை நடக்கிறது.
The post ஆப்கன் தூதரகம் மூடப்படுகிறதா? வெளியுறவுத்துறை விசாரணை appeared first on Dinakaran.