நடிகர் சித்தார்த்தை மிரட்டிய கன்னட அமைப்பினர் மன்னிப்பு கேட்டார் சிவராஜ் குமார்

பெங்களூரு: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிடுவதை கண்டித்து நேற்று கர்நாடகாவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது. காவிரி விவகாரம் கர்நாடகாவில் பற்றி எரியும் நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை நடிகர் சித்தார்த் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார். சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ என்ற படத்தின் கன்னட ரிலீசுக்காக இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் சிலர், காவிரி பிரச்னைக்கு இடையே இந்த பிரஸ் மீட் தேவையா என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

சித்தார்த் அவர்களது எதிர்ப்பை பெரிதாக பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தார். ஆனால் விடாமல் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், திடீரென அங்கிருந்த பேனர்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து சில நிமிடங்களுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, பிரஸ் மீட்டிலிருந்து சித்தார்த் வெளியேறினார். சித்தார்த் மிரட்டப்பட்டதற்கு ஏற்கனவே நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்ட நிலையில், கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமாரும் மன்னிப்பு கேட்டார். கன்னட பிலிம் சேம்பர் சார்பில் சித்தார்த்துக்கு நடந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக சிவராஜ் குமார் தெரிவித்தார்.

The post நடிகர் சித்தார்த்தை மிரட்டிய கன்னட அமைப்பினர் மன்னிப்பு கேட்டார் சிவராஜ் குமார் appeared first on Dinakaran.

Related Stories: