தேவதானப்பட்டி : தேவதானப்பட்டியில் கலெக்டர் தலைமையில் நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் தினந்தோறும் காலை மற்றும் நாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை மாவட்ட நிர்வாகம் ஊக்குவித்து வருகிறது. இதற்காக நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சிகள் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படுகிறது. இதன்படி தேவதானப்பட்டியில் நேற்று காலை நடைபெற்ற ‘நடப்போம் நலம் பெறுவோம்’ நிகழ்ச்சியினை கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
தேவதானப்பட்டி பேரூராட்சி சேர்மன் முருகேஸ்வரி, பெரியகுளம் டிஎஸ்பி கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவதானப்பட்டி கருப்பசாமி கோயிலில் இருந்து மஞ்சளாறு அணை வரை நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேவதானப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயா, துணை சேர்மன் நிபந்தன், இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், எஸ்.ஐ வேல்மணிகண்டன் மற்றும் சமூக ஆர்வலர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post கலெக்டர் தலைமையில் நடப்போம்… நலம் பெறுவோம்… appeared first on Dinakaran.