நெதர்லாந்தில் மருத்துவப் பல்கலை. வளாகத்தில் மாணவர் துப்பாக்கிச் சூடு.. தீயிட்டு கொளுத்த முயற்சி…பேராசிரியர் உட்பட 2 பேர் பலி!!

வெல்லிங்டன் : நெதர்லாந்து நாட்டின் ரொட்டர்டாம் நகரில் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பேராசிரியர்கள் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். ரொட்டர்டாம் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அருகே உள்ள வீட்டிற்குள் புகுந்த அந்த நபர் வீட்டிற்கு தீ வைத்து விட்டு அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுக் சுட்டுள்ளார். இதில் 39 வயது பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது 14 வயது மகள் படுகாயம் அடைந்தார். பின் அங்கிருந்து புறப்பட்டு மருத்துவ பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து வகுப்பறைக்கு தீ வைத்துவிட்டு மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார்.

மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடிக்க 46 வயது பேராசிரியர், துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் என்பது தெரியவந்தது. ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை. போலீசார் அவரை கைது செய்து அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டாரா என விசாரித்து வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் அந்த மாணவர் வயது 32 என்பதும் ஏற்கனவே கால்நடைகளை துன்புறுத்திய வழக்கில் தண்டனை பெற்றவர் என்பதும் தெரியவந்தது.

The post நெதர்லாந்தில் மருத்துவப் பல்கலை. வளாகத்தில் மாணவர் துப்பாக்கிச் சூடு.. தீயிட்டு கொளுத்த முயற்சி…பேராசிரியர் உட்பட 2 பேர் பலி!! appeared first on Dinakaran.

Related Stories: