புதிய வசதிகளுடன் அறிமுகமாகி உள்ள ஸ்மார்ட் கண்ணாடி: மார்க் தலைமையில் அமெரிக்காவில் நடந்த ‘மெட்டா கனெக்ட்’

வாஷிங்டன்: புதிய வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ்ஸஸ் , ஹெட்செட் உள்ளிட்டவற்றை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையில் மெட்டா கனெக்ட்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப பிரியர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட வி ஆர் ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டது. குஸ்ட் 3 என்ற இந்த ஹெட்செட் இதுவரை மெட்டா அறிமுகம் செய்த ஹெட்செட்களிலேயே அதிக செயல்திறன் கொண்டதாகவும் மேலும் மேம்படுத்தப்பட்ட மெய்நிகர் காட்சிகளை கண் முன் தத்துரூபமாக காண்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுஅக்டோபர் 10 முதல் விற்பனைக்கு வருகிறது. ஆரம்ப விலை ரூ.41,000 ஆகும். இதே போல அந்த நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஸ்மார்ட் கிளாஸசும் அறிமுகமாகியுள்ளன. ரேபட் நிறுவனத்துடன் இணைந்து இந்த கண்ணாடியை மெட்டா உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனங்கள் இணைந்து ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்திருக்கின்றன. தற்போது அறிமுகமாகியுள்ள கண்ணாடியில் கேமரா, லைவ் ஸ்ட்ரீமிங், ஏஐ உதவியாளர் வசதி உள்ளிட்டவையும் சேர்க்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 13 முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் ஆரம்பவில்லை ரூ.25,000 ஆகும். ஏஐ சாட்பாக்ஸ் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய மாற்றத்துடன் மெட்டா ஏஐ உதவியாளர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் செயலிகளான வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் வகையில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த துறையில் பிரபலமாக இருக்கும் நபர்களின் ஏஐ பிரதிநிதியுடன் பேசும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக பிரபலங்களுடன் மெட்டா கைகோர்த்துள்ளது. முதல் கட்டமாக மாடல் அழகி கெண்டல் ஜென்னர், டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா, உள்ளிட்டோரின் ஏஐ பிரதியுடன் ஏஐ பேசும் வசதி கொண்டுவரப்பட உள்ளது. வரும் நாட்களில் நடிகர்கள், இயக்குனர்கள், தொழிலதிபர்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது. இதே போல ஏஐ ஸ்டிக்கர்ஸ், ஏஐ போட்டோ எடிட், போட்டியாக ஈஎம்யு என பல வசதிகளை மெட்டா அறிமுகம் செய்துள்ள

The post புதிய வசதிகளுடன் அறிமுகமாகி உள்ள ஸ்மார்ட் கண்ணாடி: மார்க் தலைமையில் அமெரிக்காவில் நடந்த ‘மெட்டா கனெக்ட்’ appeared first on Dinakaran.

Related Stories: