தகவலறிந்த திருப்போரூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தண்டரை மனோகரன், ஒன்றிய செயலாளர் தையூர் குமரவேல், நகர செயலாளர் முத்து தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். திருப்போரூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, சிலையின் மீதுள்ள துண்டை அகற்றுவதாக கூறினர். இதுகுறித்து தலைமை கழகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டதாகவும், அங்கிருந்து மறு உத்தரவு வரும் வரை எந்த முடிவும் எடுக்க மாட்டோம், என்று அதிமுகவினர் தெரிவித்தனர்.
பின்னர் திடீரென ஓஎம்ஆர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து அதிமுகவினர் ஊர்வலமாக சென்று திருப்போரூர் பேருந்து நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*2 பேருக்கு வலை
சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, 2 பேர் சிலையின் பின்புறம் நின்றபடி, மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரிடம் காவி துண்டுகளை கொடுத்து அனுப்புவதும், அந்த நபர், சிலைக்கு காவி துண்டு அணிவிப்பதும் பதிவாகி இருந்தது. மனநோயாளியிடம் காவி துண்டு கொடுத்த 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு: அதிமுகவினர் சாலை மறியல் appeared first on Dinakaran.
