இதன் தொடர்ச்சியாக 5 மாநில தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையமும் ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வு பணிகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே முடித்து விட்டது.
இந்நிலையில் மீதமுள்ள ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் இன்று முதல் ஆய்வு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது.
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று முதல் 3 நாட்களுக்கு ராஜஸ்தானில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்துகின்றனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். தொடர்ந்து காவல்துறை, வருமான வரித்துறை, கலால்துறை, போக்குவரத்துறை, ரயில்வே துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
இதைத்தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தில் வரும் அக்.3ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் 5 மாநில தேர்தல் தேதிகள் விரைவில் வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்; 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு appeared first on Dinakaran.
