கிராமப்புற கலை பிரிவில் கிராமப்புறம் சார்ந்த உயரிய ஆடை பாரம்பரியத்திற்கு எங்கள் மரியாதையை அளித்துள்ளோம். இயற்கையின் அற்புதங்களிலிருந்து தருவிக்கப்பட்ட நிறங்களை கொண்டு ஓவியமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேலைகள் ஆசியாவின் பலதரப்பட்ட சமுதாயங்களின் துடிப்பான வரலாறுகள், சடங்குகளின் பிரதிபலிப்புகள் மற்றும் வாழ்க்கை முறைகளின் சங்கமமாகும். இந்திய கலாச்சாரம் கலெக்ஷனில் நுட்பமான பனாரஸ் வேலைப்பாடு முதல் பூஜோடியால் ஈர்க்கப்பட்ட உருவச்சின்னங்கள் வரை பல்வேறு பகுதிகளை சார்ந்த நேர்த்தியான கலையம்சங்களை இதில் உள்ளடங்கி உள்ளது.
இந்தியாவின் பலதரப்பட்ட கலை மற்றும் பாரம்பரியத்தில் வேரூன்றிய ஆடை கலாச்சாரத்திற்கு ஓர் நிரூபணமாக அமைந்துள்ளது. லினோ கலெக்ஷன் நீடித்த எதிர்காலத்திற்கான ஓர் முயற்சியை சிறப்பித்துக் காட்டுகிறது. சுற்றுச்சூழலுக்கு இணக்கமான நிறமிகளால் இயற்கை முறையில் சாயமேற்றப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்த சேலைகள் கம்பீரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் சுவாசிக்கும் பட்டுச்சேலை என்ற ஒரு கருத்தை அறிமுகப்படுத்தும் வண்ணமும் அமைகின்றன. இந்த ரகங்கள் பாரம்பரியத்தின் நவீன விளக்கத்துடன் கூடிய எடைகுறைவான அற்புத படைப்புகளாக அமைந்துள்ளன.
The post ஆர்.எம்.கே.வி சில்க்ஸ் சார்பில் பட்டுச்சேலைகளில் மற்றொரு புதுமை appeared first on Dinakaran.