கோவா பிடி கொழுக்கட்டை

தேவையானவை:

கொழுக்கட்டை மாவு – 1 கப்,
எள் – 1 டீஸ்பூன்,
கோவா – ½ கப் (சர்க்கரை சேர்க்காதது),
வெல்லத்துருவல் – அரைகப்,
தேங்காய் துருவல் – ½ கப்,
ஏலப்பொடி – சிறிது,
உப்பு – சிட்டிகை.

செய்முறை:

கொழுக்கட்டை மாவை வழக்கமான முறையில் கிளறி அதில் எள், ஏலப்பொடி, வெல்லத்துருவல், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். அதில் கோவாவை உதிர்த்து விட்டு சேர்த்துக் கிளறி மாவை பிடி கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து படைக்கலாம்.

The post கோவா பிடி கொழுக்கட்டை appeared first on Dinakaran.