இந்திய கடலோர காவல் படை அலுவலகத்தில் டிரைவர், பல்நோக்கு பணியாளர்

அந்தமான் நிக்கோபர் தீவுகள் தலைநகரான போர்ட் பிளேயரில் உள்ள இந்திய கடலோர காவல் படை அலுவலகத்தில் டிரைவர், பல்நோக்கு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணியிடங்கள் விவரம்:

1Civilian Motor Transport Driver: 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகுரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமமும், மோட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத் திறனும் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2Carpenter (Skilled): 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்குறிப்பிட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சியும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
3Multi Tasking Staff (Peon): 3 இடங்கள் (பொது). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட ஆபீஸ் அட்டெண்டராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4Multi Tasking Staff (Sweeper): 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட துப்புரவாளர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5Engine Driver: 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஜின் டிரைவராக பயிற்சி பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6Lascar: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Ship/Craftல் குறைந்தது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7Store- keeper (Grade- II): 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1) வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் குறைந்தது ஒரு வருட ஸ்டோர் கீப்பர் பணி அனுபவம்.
எஸ்சி/எஸ்டியினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Commander,
Coast Guard Region (A&N), Post Box. No: 716,
Haddo (P.O), Port Blair, PIN: 744102.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.10.23.

The post இந்திய கடலோர காவல் படை அலுவலகத்தில் டிரைவர், பல்நோக்கு பணியாளர் appeared first on Dinakaran.

Related Stories: