வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஒரு மணி நேரம் நிறுத்தி வைப்பதாக என பயணிகள் கொந்தளித்து வருகின்றனர். வைகை ரயில் நிறுத்தப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது, சிக்னல் கோளாறால் ரயில் நிறுத்தி வைப்பு என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் வந்தே பாரத் ரயிலுக்காக வைகை, குருவாயூர், சோழன் ரயில்களின் நேரத்தை மாற்றியமைக்க தெற்கு ரயில் திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.ஆனால் 46 ஆண்டுகளாக இயக்கப்படும் வைகை ரயில் நேரத்தை புதிய வந்தே பாரத் ரயிலுக்காக மாற்றக்கூடாது பிற ரயில்களின் பயண நேரம் பாதிக்கப்படாமல் வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்சியில் ஒரு மணி நேரம் நிறுத்தி வைப்பதா ?.. பயணிகள் குமுறல் appeared first on Dinakaran.
