காவிரி பிரச்னையில் நாடும், மக்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பின்னால் நிற்க வேண்டும்: சீமான் பேட்டி

கும்பகோணம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கும்பகோணத்தில் நேற்று அளித்த பேட்டி: காவிரிநீர் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்து வரும் செயல்கள் கண்டிக்கத்தக்கது. முதல்வர் தனது வீட்டுக்கு தண்ணீர் கேட்கவில்லை. மாநில மக்களுக்காக கேட்கிறார்.

காவிரி ஒழுங்காற்று குழு, நீதிமன்றம் உள்ளிட்டவற்றில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது தமிழக முதல்வரின் படத்தை அவமதிப்பு செய்வது கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வருக்கு செய்யப்பட்ட அவமதிப்பை தமிழகத்துக்கு செய்யப்பட்ட அவமதிப்பாகத்தான் பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் நாடும், மக்களும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பின்னால் நிற்க வேண்டும்.

தேசப்பற்று, தேச ஒற்றுமை, இறையாண்மை என்பதெல்லாம் தமிழர்களுக்கு மட்டும் தானா? இந்தி படித்தால் தான், சமஸ்கிருதம் படித்தால் தான் ஒன்றிய அரசு பணிக்கு வர முடியும் என்னும் போது தமிழர்கள் எவ்வாறு ஒன்றிய அரசு பணியில் சேர முடியும்? தமிழர்களுக்கு ஒன்றிய அரசு வேலை வழங்க மறுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post காவிரி பிரச்னையில் நாடும், மக்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பின்னால் நிற்க வேண்டும்: சீமான் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: