தனியார் வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல், செப்.28: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் அக்ேடாபர் 7ம்தேதி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரிகளும், கம்ப்யூட்டர் பயிற்சி, தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்துகொண்டு, தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

இம்முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுயவிவரம், உரிய கல்வி சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்துகொள்ள வேண்டும்.இம்முகாம் முற்றிலும் இலவசமானது. வேலை அளிப்போரும், வேலை நாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களது விபரங்களை பதிவுசெய்ய வேண்டும். முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04286-222260, 9159662342 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post தனியார் வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: