இந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த, அதானி குழுமத்தின் துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் அடுத்த ஆண்டு செலுத்த வேண்டிய முக்கிய கடன் பத்திரங்களை முன்கூட்டியே செலுத்த கடந்த மே மாதம் முடிவு செய்தது. முதல் தவணையாக ₹1066 கோடி கடன் பத்திரங்களுக்கான தொகையை முன்கூட்டியே செலுத்திய நிலையில், 2வது தவணையாக ₹1,600 கோடியை முன்கூட்டியே செலுத்துவதாக நேற்று அறிவித்துள்ளது.
The post 2வது தவணையாக முன்கூட்டியே ரூ.1,600 கோடி கடனை செலுத்துகிறார் அதானி appeared first on Dinakaran.