அதிமுக தலைமை கழக செயலாளர்களாகவும், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகவும் கீழ்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி அதிமுக அமைப்பு செயலாளர்களாக ஜி.பாஸ்கரன் (முன்னாள் அமைச்சர்), அ.அன்வர்ராஜா (முன்னாள் அமைச்சர்), ஆர்.மனோகரன் (அரசு தலைமை கொறடா), வி.ராமு (வேலூர் புறநகர் முன்னாள் மாவட்ட செயலாளர்), ராயபுரம் மனோ (வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்), துரை.செந்தில் (மதுக்கூர் கிழக்கு ஒன்றியம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்), ஆர்.காந்தி (தஞ்சாவூர் மத்திய மாவட்டம்) ஆகியோரும், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளராக ஐ.எஸ்.இன்பதுரை, சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் – எஸ்.அப்துல்ரகீம், கொள்கை பரப்பு இணை செயலாளர் – விந்தியா, கொள்கை பரப்பு துணை செயலாளர் (எஸ்.அய்யாத்துரைபாண்டியன்), அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் – கி.மாணிக்கம், அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் – ஏ.டி.சி.தனபால், வழக்கறிஞர் இணை செயலாளர் – இ.பாலமுருகன், வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் – என்.மாரப்பன், மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் பி.சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post இன்பதுரை, ராயபுரம் மனோ உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய பதவிகள்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.