பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாட்டில் 2023 ஜூலை மாதம் வரை 7 மாத காலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6,42,379 ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 7 மாத காலத்தில் 16,70,59,561 என உயர்ந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில் முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம் பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், குற்றாலம் மற்றும் வாலாங்குளம் ஏரி உள்ளிட்ட 9 இடங்களில் படகு குழாம்களை இயக்கி வருகிறது. இங்கு வாட்டர் ஸ்கூட்டர்கள், மோட்டர் படகுகள், விரைவு படகுகள், மிதிப்படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள், குழந்தைகளுக்கான மிதிப்படகுகள் என மொத்தம் 588 படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு நீங்காத அனுபவங்களை அளித்து வருகின்றன.
The post தமிழ்நாட்டுக்கு ஜூலை மாதம் வரை 16 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகை: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.