தமிழகத்திற்கு 3,000 கன அடி காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைக்கு அமைச்சர் வரவேற்பு

சென்னை: சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை வரவேற்கிறோம். இந்த தண்ணீர் வந்தால் ஓரளவிற்கு சமாளிக்க முடியும். அதேபோல, காவிரியில் இருந்து வந்துக்கொண்டிருக்கும் நீரை விவசாயிகள் சிக்கனமாக செலவு செய்து குறுவை சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழகத்திற்கு 3,000 கன அடி காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைக்கு அமைச்சர் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: