அதிமுக – பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு; தொண்டர்கள் குழப்பம்..!!

ஆந்திரா: அதிமுக – பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துவிட்டார். அதிமுக – பா.ஜ.க. இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த உரசல் இரு கட்சிகளின் பிரிவுக்கு வழிவகுத்துள்ளது. பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக இந்த முடிவுக்கு வந்தது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதற்கு அதிமுக தொண்டர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக – பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துவிட்டார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனகதுர்க்கை அம்மன் கோயிலில் தரிசனம் செய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க பழனிசாமி மறுப்பு தெரிவித்துவிட்டார். கூட்டணி முறிவு குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் பழனிசாமி புறக்கணித்தார். பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு குறித்து தலைவர்கள் வெளிப்படையாக பேச தயங்குவதால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

The post அதிமுக – பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு; தொண்டர்கள் குழப்பம்..!! appeared first on Dinakaran.

Related Stories: