மூலத்தரை அணை கட்டுமான பணிகளில் ஊழல்

*கேரள அமைச்சர் மீது எம்எல்ஏ குற்றச்சாட்டு

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மூலத்தரை அணை கட்டுமான பணிகளில் மின்வாரிய அமைச்சர் ஊழல் செய்துள்ளார் என எம்எல்ஏ மாத்யூ குழல் நாடன் முற்றுகை போராட்டத்தில் குற்றம்சாட்டி பேசினார். கேரள மாநிலத்தில் இடதுசாரி அரசு ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் பல திட்டப்பணிகளிலும் ஊழலை கையாண்டு வருகின்றனர்.
இதற்கு உதாரணமாக விளங்குபவர் கேரள முதல்வர் பிணராயி விஜயன். கேரள – தமிழக எல்லை பாலக்காடு மாவட்டம் மீனாட்சிபுரத்திற்கும், கோபாலபுரத்திற்கும் இடையே மூலத்தரை அணை கட்டுமான பணிகளில் முன்னாள் நீர்வள பாசனத்துறை அமைச்சரும், தற்போதைய மின்வாரிய அமைச்சருமான கே.கிருஷ்ணன்குட்டி ஊழல் செய்துள்ளார்.

இதற்கு அவரது கட்சியினரும், இடதுசாரி முன்னணி ஆட்சியினரும் உடந்தையாக உள்ளனர். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரி சித்தூர் எம்எல்ஏவும் அமைச்சருமான கிருஷ்ணன்குட்டி அலுவலகம் முன்பாக காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நேற்று நடத்தினர். இந்த போராட்டத்தை எம்எல்ஏ மாத்யூ குழல்நாடன் தொடங்கி வைத்து பேசினார். இதைத்தொடர்ந்து, மூலத்தரை கட்டுமான பணிகளில் கோடிக்கான ரூபாய் ஒப்பந்தத்தாரர்களுக்கு வழங்கியதாக சொல்லி ஊழல் செய்துள்ளனர்.

இவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரி சித்தூர் அணிக்கோடு சந்திப்பில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சுமேஷ் அச்சுதன் தலைமையில் பேரணியாக எம்எல்ஏ அலுவலகம் முன்பு வரை சென்றனர். பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கேரள மின்வாரியத்துறை அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தினர். மேலும் மூலத்தரை அணை கட்டுமான பணிகளில் மின்வாரிய அமைச்சர் ஊழல் செய்துள்ளார் என எம்எல்ஏ மாத்யூ குழல் நாடன் என குற்றம்சாட்டினார்.

இப்போராட்டத்தில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சுமேஷ் அச்சுதன் தலைமை தாங்கினார். சித்தூர் பிளாக் தலைவர் மது, காங்கிரஸ் இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் பினு, சஜேஷ் சந்திரன், கோபாலசாமி, முன்னாள் பிளாக் தலைவர்கள் பங்கஜாக்‌ஷன், ராஜா மாணிக்கம், சதானந்தன், வேளாண் காங்கிரஸ் சித்தூர் சட்டசபை தலைவர் மோகனன், முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள், மகளிர் காங்கிரஸ் அணியினர் ஆகியோர் பங்கேற்றனர்.

The post மூலத்தரை அணை கட்டுமான பணிகளில் ஊழல் appeared first on Dinakaran.

Related Stories: