நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தஞ்சை: நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். காவிரி நீரை திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி நீர் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர். இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா, நதிநீர் பிரச்சினைக்கு நதிகளை இணைப்பதுதான் ஒரே தீர்வு. நதிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியது அவசியம் என்றார்.

அதிமுக பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமா?:

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என பிரேமலதா குறிப்பிட்டார்.
அதிமுக – பா.ஜ.க. கூட்டணி முறிவு ஏற்பட்டு 2 நாட்கள்தான் ஆகிறது; பொறுத்திருந்து பார்போம். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது நிரந்தரமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதிமுக – பா.ஜ.க. விவகாரம் இரு கட்சிகள் இடையேயான பிரச்சனை என குறிப்பிட்டார்.

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு:

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளதால் தேமுதிக நிலைப்பாடு தேர்தல் நெருங்கும்போது முடிவு செய்வோம்; கூட்டணி குறித்து இப்போது கூற முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: