பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் கொள்ளையடித்த 4 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை

திருச்சி, செப்.27: பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த 4 பேருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டணை விதித்து திருச்சி கோர்ட் தீர்ப்பளித்தது. திருச்சி ஏர்போர்ட் குளவாய்பட்டி சாலை வளன் நகரை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி சகாய மேரி. இவர் கணவனை பிரிந்து இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 14.6.16ம் தேதி மதியம் வீட்டில் தன் மகள்களுடன் குடும்ப நண்பர் அன்பு செல்வன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த 4 மர்ம நபர்கள் சகாயமேரி கழுத்திலும், அன்புசெல்வன் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி 5 செல்போன்களை பறித்தனர். மேலும் வீடுமுழுவதும் தேடியும் பணம், நகை எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து

சகாயமேரியின் மகள்கள் அணிந்திருந்த கொலுசுகள், மேரியின் கம்மல்கள், ஜாக்கெட்டுக்குள் வைத்திருந்த ₹.400, டேபிளில் இருந்த லேப்டாப், மேரி மற்றும் அன்புசெல்வன் வைத்திருந்த ஏடிஎம் கார்டுகள், வெளியே நிறுத்தியிருந்த எடுத்துக் கொண்டு தப்பினர். இது குறித்து சகாயமேரி அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தென்னுாரை சேர்ந்த தம்பிரஜா என்ற ஷேக் அப்துல் காதர் (27), சபீர் அகமது (36), சாதிக்பாட்ஷா (36), சங்கிலியாண்டபுரம் முனிர் அகமது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருச்சி சிஜேஎம் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் நேற்று நீதிபதி மீனா சந்திரா தீர்ப்பளித்தார். அதில் நான்கு பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ₹.5 ஆயிரம் வீதம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் உத்தரவிட்டார்.

குற்றவாளிகளிடம் இருந்து பெறப்படும் அபராத தொகையை ஆயிரத்தை சகாயமேரி வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் கூடுதல் சிறப்பு அரசு வக்கீல் ஹேமந்த் ஆஜரானார்.

The post பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் கொள்ளையடித்த 4 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: