கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உதவி மையம் மூலம் 629 பேர் பயன்

மோகனூர், செப்.27: தமிழக அரசால் மகளிர் பொருளாதாரத்தை உயர்த்த இலவச பஸ் வசதி, கல்லூரி மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டம் மூலம் உதவித்தொகை என திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனையடுத்து கலைஞர் மகளிர் திட்டம் மூலம் மாதம் ₹1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து பணம் பெறாதவர்கள் விண்ணப்பம் குறித்த தகவலறிய கடந்த 19ம் தேதி தாலுகா அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் நேரிடையாக மனு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மோகனூர் தாலுக்காவில் இதுவரை 629 பேர் உதவி மையத்தை நாடி மனு மீதான நடவடிக்கைகள் குறித்து அறிந்துள்ளனர். இதில் நிராகரிப்பட்ட மனுக்கள், வருமானவரி செலுத்துபவர்கள், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள், கள ஆய்வில் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள், அதிக சொத்து வைத்திருப்பவர்கள், ஆண்டு வருமானம் ₹2,50,000 மேல் வைத்திருப்பவர்கள் என மொத்தம் 184 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது உதவி மையம் மூலம் அறியப்பட்டுள்ளன. தொடர்ந்து உதவி மையம் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் இம்மையம் மூலம் உதவி தொகை பெறாதவர்கள் விபரங்களை தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உதவி மையம் மூலம் 629 பேர் பயன் appeared first on Dinakaran.

Related Stories: