திருட்டுத்தனமாக டெல்லி போறாங்க… கூட்டணி விவகாரத்தில் அதிமுக-பாஜ நாடகம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தர்மபுரி: ‘முன்னாள் அமைச்சர்கள் திருட்டுத்தனமாக டெல்லி சென்றுள்ளார்கள். கூட்டணி விஷயத்தில் அதிமுக-பாஜ நாடகமாடுகிறது’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது.

இக்கூட்டத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
அதிமுகவும், பாஜவும் குழம்பி, மக்களையும் குழப்பி விட்டுள்ளனர். இப்போது புதுப்பிரச்னை போய் கொண்டிருக்கிறது. கூட்டணி இருக்கா? இல்லையா?. காலையில் இருக்கிறது என்கின்றனர், மதியம் இல்லை என்கின்றனர். 4 முன்னாள் அமைச்சர்கள் திருட்டுத்தனமாக டெல்லி சென்றுள்ளார்கள். இவர்கள் கூட்டணி விஷயத்தில் நாடகம் ஆடுகிறார்கள். தேர்தலின்போது இணைந்துதான் இருவரும் ஓட்டு கேட்க வருவார்கள். ஒருவன் திருடன், ஒருவன் கொள்ளைக்காரன்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, பாஜவை விரட்டியடிக்க வேண்டும். தேர்தலில், அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் விரட்டி அடிக்க வேண்டும். நம்முடைய கூட்டம் கொள்கை கூட்டம் என்பதை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

The post திருட்டுத்தனமாக டெல்லி போறாங்க… கூட்டணி விவகாரத்தில் அதிமுக-பாஜ நாடகம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: