விவசாயி மரணம் இழப்பீடு வழங்க அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:
திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி எம்.கே.ராஜ்குமார், சுமார் 15 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்தார். லட்சக்கணக்கில் கடன் வாங்கி பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால் மிகுந்த மன வேதனை அடைந்தார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு தன் நிலத்திலேயே உயிரை விட்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயி ராஜ்குமார் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

The post விவசாயி மரணம் இழப்பீடு வழங்க அரசுக்கு வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: