ராமதாஸ் வலியுறுத்தல் இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள் வரும் 28ம் தேதி முதல் போராட்டம் அறிவித்துள்ளனர். 2009ம் ஆண்டில் தொடங்கி 14 ஆண்டுகளாக நீடித்து வரும் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவர்களுக்கும், அரசுக்கும் இடையில் பலமுறை பேச்சு நடத்தியும் எந்த தீர்வும் காணப்படாதது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலினும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை நன்கு உணர்ந்துள்ள முதல்வர், உடனடியாக அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் அவர்களின் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கி சிக்கலைத் தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ராமதாஸ் வலியுறுத்தல் இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் appeared first on Dinakaran.

Related Stories: