கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார் திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, செப்.26: திருவண்ணாமலையில் கோ ஆப்ெடக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் முருகேஷ் நேற்று தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை திருமஞ்சன கோபுர வீதியில் செயல்படும் பவுர்ணமி கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. மண்டல மேலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை விற்பனை நிலைய மேலாளர் தணிகைவேலு வரவேற்றார். விழாவில், தீபாவளிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பட்டு ஜவுளி ரகங்கள் தள்ளுபடி விற்பனையை கலெக்டர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார். மேலும், புதிய வடிவிலான சேலை ரகங்களை பார்வையிட்டார்.
தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை குறித்து, அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தாவது: வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட 12 கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. திருவண்ணாமலை பவுர்ணமி கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு ₹90.91 லட்சம் மதிப்பிலான ஆடைகள் விற்பனையானது. இந்த ஆண்டு ₹2 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆன்லைன் விற்பனையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

The post கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார் திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.

Related Stories: