இது தொடர்பான அப்பீல் மனு நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘ உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை தமிழ்நாடு அரசு மீறி வருகிறது என புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,‘‘ இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும். ஆகம கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் ஆகியவற்றில் தற்போது என்ன நிலை இருக்கிறதோ அதுவே தொடர வேண்டும் என உத்தரவிட்டனர்.
The post அர்ச்சகர்கள் நியமனத்தில் தமிழ்நாட்டில் தற்போதைய நிலையே தொடரும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
