ஓகா மற்றும் பங்கஜ் மித்தல் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,’பாதிக்கப்பட்ட மாணவனை அவனது மதத்தின் காரணமாக அடிக்குமாறு ஆசிரியர் கூறினார் என்றால் அங்கு என்ன வகையான கல்வி கற்பிக்கப்படுகிறது? குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக ஒரு மாணவர் தண்டிக்கப்பட வேண்டுமென்றால், அங்கு தரமான கல்வி கற்பித்து இருக்க முடியாது. சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது’ என்றனர்.
அப்போது உ.பி அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், ‘இந்த வழக்கில் வகுப்புவாத கோணம் ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளது’ என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,’இது மிகவும் தீவிரமான பிரச்னை. நாங்கள் இதை தீவிரமாக விசாரிப்போம். இந்த சம்பவம் மாநிலத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்க வேண்டும். இந்த சம்பவம் பற்றி மூத்த ஐபிஎஸ் அதிகாரி விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
The post முஸ்லிம் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா?..உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.
