கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு 6605 கனஅடியாக அதிகரிப்பு..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு 6605 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தினசரி 5 ஆயிரம் கனஅடி திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வரை கர்நாடகாவில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அமைப்பினர், விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அதனால் 3,000 முதல் 4,000 கனஅடி மட்டுமே திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு 6605 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று 4,800 கனஅடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 4105 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 2,500 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளுக்கு தற்போது நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், பெங்களூருவை ஒட்டியுள்ள பகுதிகளிலும் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர் வரத்தானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே இனி வரும் நாட்களில் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு 6605 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: